ஒடிசாவில் 46.3 டிகிரி வெயில்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள 14 நகரங்களில் நேற்று முன்தினம் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதில் அதிகபட்சமாக தொழிற்சாலைகள் நிறைந்த தல்செர் பகுதியில் 46.3 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். தல்செருக்கு அடுத்தபடியாக தித்லகார் பகுதியில் 44.5 டிகிரி வெயில் பதிவானது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், “மாநிலத்தில் பகல் நேரத்தில் வெயில் குறைவதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த சில நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்,” என்று தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon