தேர்தல் நடத்தை மீறல்; மோடிக்கு எதிராக மனு

தேர்தல் நடத்தை மீறல்; மோடிக்கு எதிராக மனு

1 mins read
fc7cd4ae-f6c4-4691-8626-f9ff4f3fa53a
-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷாவும் பொதுத்தேர்தல் சமயத்தில் நன்னடத்தை மீறியதாக காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரிக்கப்படுகிறது.

திரு மோடியும் திரு ஷாவும் தங்களது பிரசார உரையின்போது பாதுகாப்புப் படையினரின் சாதனைகளைத் தங்களது சொந்த சாதனைகளாகச் சித்தரித்துப் பேசியதாகவும் அது தேர்தல் விதிமுறைகளை மீறும் விதத்தில் இருப்பதாகவும் அந்த மனு குறிப்பிடுகிறது. அவ்விரு தலைவர்களும் வெறுப்புணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பல்வேறு முறை பேசியிருப்பதாகத் தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் பல முறை புகார் செய்தபோதும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் காங்கிரஸ் தரப்பினர்.