புதுடெல்லி: பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகிய இருவர் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.
இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது. எனினும் இது தொடர்பாக தேர்தல் ஆணை யம் உரிய நடவடிக்கை மேற் கொள்ளவில்லை என்றும் அக் கட்சி அதிருப்தி வெளியிட்டி ருந்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் என்ற பெண் எம்பி உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.
இதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணை மே 2ஆம் தேதி (நாளை) நடைபெறும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷா மீதான புகார் குறித்து மத்திய தேர்தல் ஆணையம் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத் தியது. இந்தக் கூட்டத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமை தாங்கி னார். கூட்டத்தில் மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மீதான தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பான புகார் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற் கொண்ட போது பேசிய சில விஷ யங்கள் குறித்து பாஜக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்தும் தேர்தல் ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

