புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடி யுரிமை பெற்றிருப்பதாக எழுந் துள்ள சர்ச்சை, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையேயான மோதலை மேலும் வலுப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து குடியுரிமை தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச் சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடுத்த 15 நாட்களுக்குள் ராகுல் பதில் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சு குறிப்பிட் டுள்ள நிலையில், பாஜகவுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட் டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ராகுல் காந்தி இங்கிலாந்து குடிமகன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி 2015ஆம் ஆண்டு முதல் கூறி வருகிறார்.
இதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டை உரிய ஆவணங்கள், ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண் டும் என ராகுல் காந்தி கூறினார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தில் ராகுல் காந்தி இயக்குநராக இருப்பதாக உள் துறை அமைச்சு தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.
"இங்கிலாந்து நிறுவனத்தில் நீங்கள் இயக்குநராக இருப்பதாக பாஜக எம்பி சுப்பிரமணியம் சுவாமி புகார் தெரிவித்துள்ளார். அந்நிறுவ னத்தின் 2005-2006ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில், உங்களின் பிறந்த தேதி 19.06.1970 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த 17.02.2009இல் அந்த நிறுவனத்தை கலைக்க அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப் பத்திலும் உங்களது குடியுரிமை இங்கிலாந்து எனக் கூறப்பட்டுள் ளது. இதனால் இந்த நோட்டீஸ் கிடைத்த பின் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்," என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்று வரும் நிலையில், மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கடு மையாக எதிர்த்துள்ளது.
பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் தேர் தலில் பாஜக தோற்றுவிடும் என்ற பயம் வந்திருப்பதாகவும், அதன் காரணமாகவே ராகுலுக்கு நோட் டீஸ் அனுப்பப்பட்டதாகவும் காங்கி ரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறியுள்ளார்.
இதற்கிடையே ராகுலுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
"உள்துறை அமைச்சுக்கு வரும் புகார்கள் தொடர்பில் உரிய நட வடிக்கை எடுக்கப்படுவது வழக்க மான நடைமுறைதான் என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

