10 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர்

10 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர்

1 mins read

திருவனந்தபுரம்: மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற விமான நிலைய ஒப்பந்தப் பணியாளர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

நேற்று அனீஷ் என்ற அந்த ஆடவர், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கடத்தல் தங்கத்துடன் வெளியே சென்ற போது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து தங்கம் இருந்த பையை கீழே போட்டுவிட்டு அவர் ஓட்டம் பிடித்தார். அந்தப் பையில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அனீஷை பாதுகாப்புப் படையினர் வளைத்துப் பிடித்தனர்.