மும்பை: தொழிலாளர்கள் தின மான நேற்று ஜெட் ஏர்வேஸ் நிறு வன ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட் டனர்.
கடும் பொருளாதார நெருக்கடி யில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பொருளாதார நெருக்கடி கார ணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது செயல்பாட்டை நிறுத்தி உள்ளது. அதன் விமானச்சேவை அறவே நிறுத்தப்பட்டுள்ளது. அந் நிறுவன விமானிகளுக்கு மூன்று மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதர ஊழியர் களும் ஊதியம் கிடைக்காத தவிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன் றதாக அந்நிறுவனத்தினுடன் 11 ஆண்டுகளாக தொடர்பில் உள்ள சுஷ்மா என்பவர் தெரிவித்துள்ளார்.
"அரசாங்கம் இந்நிறுவ னத்தைக் காப்பாற்ற வலியுறுத்தி அமைதிப் பேரணி செல்ல இருக்கிறோம். இந்நிறுவனத்தில் உள்ள 22 ஆயிரம் ஊழியர்களின் நலன் காக்கப்பட வேண்டும்," என்றார் சுஷ்மா.
இந்நிலையில் தொழிலாளர்கள் தினமான நேற்று ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மும்பை விமான நிலைய வளாகத்தில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

