செல்ஃபி மோகத்தால் ரயில் மோதி மூவர் உயிரிழப்பு

செல்ஃபி மோகத்தால் ரயில் மோதி மூவர் உயிரிழப்பு

2 mins read

புதுடெல்லி: தண்டவாளத்தில் செல்ஃபி படம் எடுக்க முயன்ற மூன்று ஆடவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாமன், கி‌ஷண், சன்னி ஆகிய மூவரும் உறவினர்கள் ஆவர். திருமண வைபவம் ஒன்றில் பங் கேற்பதற்காக மூவரும் அண்மை யில் டெல்லி சென்றிருந்தனர். தினேஷ் என்ற நண்பரும் உடன் சென்றார்.

நேற்று முன்தினம் மாலை டெல்லியில் பானிபட் பூங்கா பகுதியில் நால்வரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட னர். அப்போது அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மீதேறி நின்று செல்ஃபி படம் எடுக்க விரும்பியுள்ளனர்.

அச்சமயம் பயணிகள் விரைவு ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தனர். இதையடுத்து தூரத்தையும் வரும் ரயிலையும் சேர்த்து செல்ஃபி எடுக்க வேண்டும் எனும் ஆசை அவர் களுக்கு ஏற்பட்டது.

தண்டவாளத்தின் மீது நின்று பல்வேறு கோணங்களில் ஆர்வத் துடன் படம் எடுத்துக் கொண்டி ருந்த நால்வரும், ரயில் அருகில் வந்ததைக் கவனிக்கவில்லை.

சில நொடிகளில் ரயில் அருகே வந்துவிட்ட நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் அதைக் கண்ட தினேஷ் மட்டும் தண்டவா ளத்தில் இருந்து சட்டென குதித்து உயிர் தப்பினார்.

எனினும் சாமன், கிஷண், சன்னி ஆகிய மூவர் மீதும் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூவ ரும் உடல் துண்டு துண்டாகச் சிதறிய நிலையில் பலியாகினர்.

அவர்களது உடல் பாகங்கள் 30 அடி தூரம் வரை சிதறிக் கிடந்தன. இதைக்கண்ட தினேஷ், மயங்கி விழுந்தார். இச்சம்பவம் டெல்லி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.