புதுடெல்லி: ஃபானி புயல் நாளை ஒடிசாவில் சுமார் 205 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித் துள்ளது.
புயலால் ஒடிசா மாநிலத்தில் 5 மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக் கப்பட வாய்ப்புள்ளதாக அம்மாவட் டங்களில் தேர்தல் நடத்தை விதி முறைகளில் தளர்வு அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது.
கோவில் நகரமான பூரியில் இருந்து, சுற்றுலா பயணிகள் நாளை மாலைக்குள் வெளியேற வேண்டும் என்று, அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்தியாவசியமற்ற பணிகளுக் காக யாரும் மேற்கண்ட மாவட்டங் களுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஃபானி புயலால் ஒடிசா மட்டு மல்லாமல், ஆந்திரா, மேற்கு வங்க மாநிலங்களும் பாதிப்பை எதிர் கொள்ள இருக்கின்றன.
இதையடுத்து இம்மூன்று மாநிலங்களிலும் தேசியப் பேரிடர் மீட்புப்படையின் 41 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அதிகப்படியாக ஒடிசாவில் 28 குழுக்கள் முகாமிட்டுள்ளன.
இன்று முதலே ஒடிசாவில் அனைத்து கல்வி நிறுவனங்க ளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

