சூரத்: பாலியல் பலாத்கார வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் அஸ்ராம் பாபுவின் மகன் நாரா யண் சாய்க்கு சூரத் நீதிமன்றத் தில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சூரத் நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கி யுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் சாமியார் அஸ்ராம் பாபு, நாராயண் சாய் ஆகியோர் மீது பாலியல் புகார் கொடுத்தனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை அஸ்ராம் பாபுவுக்குச் சொந்தமான ஆசிரமத்தில் தாங்கள் இருவரும் தங்கி இருந்ததாகவும், அச்சமயம் நாராயண் சாய் தன்னை ஓர் அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரத் துக்கு உட்படுத்தியதாகவும் சகோதரிகளில் ஒருவர் குற்றம்சாட்டினார்.
இந்தப் புகார் கடந்த 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாராயண் சாய் போலிசாரால் கைது செய்யப் பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், கடந்த 26ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாராயண் சாய் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நேற்று முன்தினம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சர்ச்சை சாமியார் அஸ்ராம் பாபுவும் மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

