நக்சல் தாக்குதலில் 16 வீரர்கள் பலி

நக்சல் தாக்குதலில் 16 வீரர்கள் பலி

2 mins read

கட்ச்ரோலி: நக்சலைட்டுகள் மேற் கொண்ட பயங்கர தாக்குதலில் சிக்கி 16 அதிரடிப்படை வீரர்கள் பலியாகி உள்ளனர். இச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை அம்மாநிலத்தின் கட்ச்ரோலி பகுதியில் கமாண்டோ படை வீரர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ரிமோட் கருவி மூலம் இயக்கப்படும் வெடிகுண்டுகளை அவர்கள் வெடிக்கச் செய்தனர்.

மேம்படுத்தப்பட்ட வெடி குண்டுக் கருவிகள் மூலம் அவர் கள் இத்தாக்குதலை மேற்கொண்ட தாகத் தெரிகிறது. இதில் பேருந் தில் சென்ற வீரர்களில் பெரும் பாலானோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அனை வரும் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் குண்டுவெடிப்பில் குறைந்தது 16 வீரர்கள் உயிரி ழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள் ளது.

மேலும் 20 வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப் பதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

இதற்கிடையே தாக்குதல் நடைபெற்ற பகுதியில் ஒளிந்துள்ள நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தகவல் கிடைத்த சில நிமிடங்களில் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் நக்சல்களைக் குறி வைத்து வேட்டையாடி வருகின் றனர்.

நக்சல்களின் தாக்குதலைய டுத்து மகாராஷ்டிர மாநிலத்தின் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான வாக னங்களை நக்சல்கள் நேற்று முன் தினம் தீயிட்டுக் கொளுத்தினர். 25க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியும் உள்ளனர்.

இச்சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு பேருந்தில் சென்ற போதே கமாண்டோ வீரர்கள் மீது நக் சல்கள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.