ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை நிறுவியவருக்கு எதிராக ஐ.நா தடைகள்

ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை நிறுவியவருக்கு எதிராக ஐ.நா தடைகள்

1 mins read
5267eb31-e94d-42de-a491-db0096da9009
-

ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை நிறுவியவருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் (ஐ.நா) அமைப்பு புதிய தடைகளைச் செயல்படுத்தியுள்ளது. அந்த நடவடிக்கையை முதலில் ஆட்சேபித்த சீனா, தனது எதிர்ப்பை மீட்டுக்கொண்டதை அடுத்து இவ்வாறு நடந்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றது. அத்தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவப் படையினர் உயிரிழந்தனர்.

அமைப்பை நிறுவிய மன்சூர் அஸாருக்கு எதிராகத் தடைகளைச் செயல்படுத்த சீனாவின் ஆதரவைப் பெறுவதற்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் வர்த்தகத் தடை செயற்குழுவில் சமர்ப்பித்த வேண்டுகோள் ஆவணங்களிலிருந்து புல்வாமா நகரத் தாக்குதல் பற்றிய குறிப்புகளை அகற்றின.

15 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தச் செயற்குழு, அஸாருக்கு எதிராக ஆயுதம், பயணம் மற்றும் சொத்து தொடர்பான தடைகளை விதித்துள்ளது.