இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 800,000 பேர் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மணிக்கு 200 கிலோமீட்டர் வீசும் 'ஃபானி' சூறாவளி, ஒடிஷா மாநிலத்திலுள்ள பூரி நகரை வெள்ளிக்கிழமை அடையும் என்று அதிகாரிகள் கூறினர்.
சூறாவளியின் தாக்கத்தை ஒடிஷாவின் 13 மாவட்டங்களில் உணரப்படும் என்று மாநில பேரிடர் நிர்வாக அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பள்ளிகளிலும் அரசாங்கக் கட்டடங்களிலும் கிட்டத்தட்ட 1,000 தற்காலிக பாதுகாப்பு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் அங்கே தங்கலாம்.
இந்தச் சூறாவளியால் இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகப் பெரும் புயல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

