புதுச்சேரி: மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கத்துக்கு ஆளுநர் கட்டுப் பட்டு ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என்று முன்பு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதால் புதுவை ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை புதுவையில் வலுத்து வருகிறது.
புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராய ணசாமி தலைமையிலான அமைச் சரவைக்கும் கடந்த மூன்று ஆண்டுகாலமாக மோதல் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு மக்கள் நலத் திட்டங் களுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் கிரண்பேடி செயல் படுவதாக முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் தனக்கே முழு அதிகாரம் உள்ளது என்று ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து கூறி வரு கிறார்.
இந்த நிலையில் டெல்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், யூனியன் பிரதேச ஆளுநர்களின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து இந்தத் தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக் கும் பொருந்தும் என்று முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
ஆனால் இதனை ஏற்காத கிரண் பேடி, புதுவைக்கும் டெல் லிக்கும் தனித்தனி விதிகள் இருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே மத்திய உள் துறை அமைச்சகம் புதுவை ஆளு நருக்கு கூடுதல் அதிகாரம் இருப் பதாகக் கூறி ஆளுநருக்குரிய அதிகாரத்தை வரையறுத்து ஒரு உத்தரவை வெளியிட்டது.
இதனால் கிரண் பேடியின் தலையீடு அதிகரித்தது.
இந்த நிலையில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி மத்திய உள்துறை அமைச்சின் உத்தரவை ரத்து செய்ய கோரி புதுவை முதல் வரின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கே அதி காரம் உள்ளது என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சின் உத்தரவையும் ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பை வரவேற்ற முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண் பேடி இனியாவது அரசுக்கு இடையூறு செய்யாமல் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே சமூக வலைத் தளத்தில் கருத்து வெளியிட்ட ஆளுநர் கிரண்பேடி, "தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வழக்கம்போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகள் ஆய்வு செய்து அனுமதியளிக்கப் படுகிறது," என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆளுநர் கிரண் பேடி திட்டமிட்டுள்ளார்.

