பாம்பாட்டிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த பிரியங்கா

பாம்பாட்டிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த பிரியங்கா

1 mins read
8b873bf5-da6d-4687-8a28-451af7d80887
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி­யில் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்த காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, அப்பகுதியில் வசித்து வரும் பாம்பாட்டி ஒருவரிடம் உரையாடுகிறார். படம்: ஊடகம் -

ரேபரேலி: உத்தரப்பிரதேசம் மாநி­லத்­தில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தல், நான்கு கட்டங்களாக முடிவடைந்த நிலை­யில், எஞ்சிய தொகுதி­களுக்கு இம்மாதம் 6,12,19 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதையடுத்துக் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் தலை­வர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு­கின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்­தரப்­­­பிரதேசம் மாநிலத்தின் பொறுப்­பாள­ராக நியமிக்கப்பட்ட பிரியங்கா, நேற்று சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதி­யில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்பகுதியில் வசிக்கும் பாம்­பாட்டிகளுடன் கலந்துரையாடினார்.

இதில் அவர்களது அன்றாடத் தேவை மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பாம்பாட்டிகள் வைத்திருந்த பாம்புகளைக் கையில் எடுத்துப் பார்த்தும், தனது கால்களுக்குக் கீழ் இருக்கும் பாம்பை எடுத்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சிறிதும் பயமின்றி கூடையில் இருந்த பாம்புகளைத் தொட்டுப் பார்த்தபடியே பாம்பாட்டிகளிடம் உரையாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா கூறுகையில், "பாஜக, காங்கிரசின் கருத்துகள் தேர்தலுக்கு அப்பாற்பட்டவை.

"நாங்கள் எப்போதும் அவர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்.

"அரசியலில் பாஜக தான் எங்கள் எதிரி. ஒருபோதும் பாஜகவிற்குச் சாதகமான சூழல் உரு­வாக நாங்கள் விடமாட்டோம்.

"ஏனென்றால் வலிமையான, உறுதியான வேட்பாளர்களை நாங்­கள் கொண்டுள்ளோம். மேலும் கடுமையாகப் போராடுவோம்," எனக் கூறினார்.