புதுடெல்லி: கழுதை மீது சவாரி செய்து பீகாரை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவர் மிருகங்களைத் துன்புறுத்தியதாக கூறி, அவர் மீது மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மணிபூஷன் சர்மா என்ற அந்த வேட்பாளர், தனது கழுதை சவாரியை நியாயப்படுத்தி பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகள் சவாரி செய்கின்றனர்.
அதனைக் குறிப்பால் உணர்த்தவே இவ்வாறு செய்ததாக சர்மா தெரிவித்தார். இந்தியாவில் மிருகவதைக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்படுகிறது. இதற்கு அபராதத்துடன், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

