சுடச் சுடச் செய்திகள்

குட்டைப்பாவாடைப் பெண்களும் பாலியல் வன்செயலும் - சர்ச்சைப் பேச்சு

புதுடெல்லி: குட்டைப்பாவாடை அணியும் பெண்களே பாலியல் வன்செயலுக்குத் தகுதியானவர்கள் என்று டெல்லி உணவகம் ஒன்றில் இளம்பெண்களை விமர்சித்த மற்றொரு பெண்ணின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

குட்டைப்பாவாடை அணிந்து பெண் ஒருவர் தனது தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அந்த இளம் பெண்களை அவர்களது உடையைக் காரணமாகக் காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த இளம்பெண்களின் உடை குறித்துக் கேலி செய்த மற்றொரு பெண், அருகில் இருந்த ஆண்களிடம் நீங்கள் இவர்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இப்படி உடை அணிந்து வருகிறார்கள் என்றும், இவர்கள் எல்லாம் நீங்கள் பலாத்காரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என்றும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தி பாடம் புகட்டுமாறு அங்கிருந்த ஆண்களையும் அவர் அழைத்ததாகத் தெரிய வருகிறது. இதுகுறித்துக் காவல்துறையிடம் அந்த இளம்பெண்கள் புகார் செய்வார்கள் என்று தெரிகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon