சுடச் சுடச் செய்திகள்

உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கு ரத்து

இந்தியாவின் உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை ‘பெப்சிகோ’ நிறுவனம் ரத்து செய்துள்ளது. பெப்சிகோவின் ‘லேஸ்’ உருளைக்கிழங்கு வறுவலுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வகையான ஒரு கிழங்கை அந்த விவசாயிகள் வளர்த்தது தனது காப்புரிமையை மீறியச் செயல் என்று அந்நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. 

‘எஃப்சி 5’ வகையைச் சேர்ந்த உருளைக் கிழங்கை வளர்த்த அந்த விவசாயிகள் அவற்றைத் தனக்கே விற்கவேண்டும் அல்லது அந்த வகை கிழங்கை வளர்ப்பதை நிறுத்தவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பெப்சிகோ வழக்கை ரத்து செய்தது.

நொறுக்குத் தீனி, இனிப்புப் பானம் ஆகியவற்றைத் தயாரிக்கும் பெப்சிகோ, ஏப்ரலில் மேலும் ஐந்து விவசாயிகள் மீது வழக்குத் தொடுத்தது. ஆனால் இப்போது பிரச்சினையை நட்பார்ந்த முறையில் தீர்க்க விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

“அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பெப்சிகோ நிறுவனம், விவசாயிக்கு எதிரான தனது வழக்கை மீட்டுக்கொள்ள இணங்கியுள்ளது,” என்று பெப்சிகோவின் பேச்சாளர் தெரிவித்தார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon