ஃபானி புயல் ஒடிஷா மாநிலத்தை உலுக்கி வரும் வேளையில் புவனேஸ்வர் நகரிலுள்ள 32 வயது பெண் ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு 'ஃபானி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குழந்தையின் தாயார் ரயில்வே ஊழியர். அவருக்கு தாயாரின் முதல் குழந்தையாகப் பிறந்திருக்கிறது 'ஃபானி'.
பலமாக வீசிய காற்றால் ஒடிஷாவின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. இதில் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

