சுடச் சுடச் செய்திகள்

முதல்வர் பதவிதான் வேண்டும்: துணை சபாநாயகர் பிடிவாதம்

பானாஜி: கோவா முதல்வராக இருந்த பாஜகவின் மனோகர் பரிக்கர், உடல்நலக்குறைவால் கடந்த மார்ச் 17ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து கோவா சட்ட மன்ற சபாநாயகரும் பாஜக மூத்த தலைவருமான பிரமோத் சாவந்த் முதல்வராக பதவி ஏற்றார்.

எனவே துணை சபாநாயக ரான மைக்கேல் லோபோவை (படம்) அடுத்த சபாநாயகராக தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற வளாகத்தில் துணை சபா நாயகர் மைக்கேல் லோபோ அளித்த பேட்டியில், “சபாநாய கராக நான் தேர்வு செய்யப்படுவ தாக வந்த செய்தியில் உண்மை இல்லை.

“சபாநாயகர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன். அந்தப் பதவி எனக்கு வேண்டாம்.

“சபாநாயகர் பதவி மூலம் பொது மக்களின் பிரச்சினை பற்றி பேச முடியாது.

“பாஜக மேலிடம் என்னை கட் டாயப்படுத்தினாலும் சபாநாயகர் பதவியை ஏற்க மாட்டேன்.

 எனக்கு முதல்வர் பதவி தான் வேண்டும். மேலிடத்தின் முடிவுக் காக காத்திருக்கிறேன்,” என்றார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon