புதுடெல்லி: இந்தியாவை ஆண்ட எந்த அரசும் இப்படி வாக்கு கேட்கவில்லை என மோடியை விமர்சித்துள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பால்கோட்ல் தீவிரவாத முகாம்கள் மீது, நம் விமானப் படையினர் துல்லியத் தாக்குதல் களை நடத்தியதை, வாக்கு சேகரிப்பதற்காக மோடி பயன் படுத்தி வருவது வெட்கக்கேடு.
"இதுபோல, எத்தனையோ துல் லியத் தாக்குதல்களை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிகழ்த்தியுள்ளது.
ஆனால், அதுகுறித்து ஒரு போதும் விளம்பரப்படுத்தியதும் இல்லை; வாக்குக்காகப் பயன்படுத்தியதும் இல்லை," என்று ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் மன்மோகன் சிங்.
மேலும் அவர் பேசுகையில், ``கடந்த எழுபது ஆண்டுக் காலங்களில் இந்தியாவை ஆண்ட எந்த அரசும், நம் ராணுவத்தின் வீரத்தில் ஒளிந்து கொண்டு வாக்கு கேட்கவில்லை. ஆனால், அதை மோடி செய்து வருகிறார். "இது, நாட்டின் பொருளியல், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வறுமை ஆகியவற்றில் இந்த அரசு சந்தித்த, மன்னிக்க முடியாத தோல்விகளைத் திசை திருப்பும் நடவடிக்கை," என்று தெரிவித்து உள்ளார்.
மன்மோகன் சிங்கின் இக் கூற்றை வழி மொழிந்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா.
இது தொடர்பாக செய்தியாளர் களைச் சந்தித்தபோது, 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 6 முறை துல்லியத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறினார்.
மேலும், ஒரு போதும் அரசியல் லாபத்துக்காக ராணுவ நடவடிக் கைகளை எடுக்க நாங்கள் முற்பட வில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடே கர் காங்கிரஸ் கூறுவது பொய் எனக் கூறி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அப்பதிவில், முதல் சர்ஜிக்கல் தாக்குதல் என்பது 2016ல் தான் நடத்தப்பட்டது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட பதிலில் தெரிய வந்து உள்ளது. இதில் இருந்து காங் கிரஸ் மேலும் ஒரு பொய் கூறி உள்ளது தெரிகிறது என்று கூறி உள்ளார்.
இது பற்றி விமர்சித்த, அருண் ஜெட்லி, காங்கிரஸ் நடத்திய துல் லிய தாக்குதல் கண்ணுக்குத் தெரியாததும் யாரும் அறிந்திராதது மாக இருந்தது என்று சொன்னார்.

