மக்களோடு மக்களாக உறவாடி ஸ்டாலின் பிரசாரம்

மக்களோடு மக்களாக உறவாடி ஸ்டாலின் பிரசாரம்

1 mins read

திருப்பரங்குன்றம்: திமுக தலைவர் ஸ்டாலின், திருப்பரங் குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருப்பரங்குன்றம் நகரில் பல இடங்களுக்கும் நடந்தே சென்ற அவர், மக்களோடு மக்களாகக் கலந்து உறவாடி வாக்கு வேட்டை ஆடினார்.

அவருடன் பலரும் படம் எடுத்துக்கொண்டனர். சாலை ஓரத்தில் கடை நடத்துவோர், பாதசாரிகள், பயணிகள், கடைகண்ணிக்குச் செல்வோர் எல்லாரையும் கண்டு பேசி உரையாடி திமுகவுக்கு வாக்கு அளிக்கும்படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். "ஸ்டாலின் மக்கள் தலைவராக ஜொலிக்கிறார்," என்று திமுக பிரமுகர் ஒருவர் கூறினார்.