சென்னை: பாஜகவும் தேர்தல் ஆணையமும் வெளிப்படையா கவே கூட்டு வைத்திருப்பதாகத் தெரிகிறது என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.
சென்னை விமானநிலையத் தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தேர்தல் ஆணையத் தின் செயல்பாடு மூலம் அந்தக் கூட்டு தெரியவருகிறது என்றார்.
ஆணையம் மட்டுமின்றி அரசுத் துறைகள் அனைத்தும் பாஜக சொல்வதைக் கேட்டு செயல்படக்கூடிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிகிறது என்றும் கனிமொழி குறிப்பிட்டார்.
திமுக யாரோடும் மறைமுக மாக கூட்டணி வைக்கவேண்டிய அவசியம் அறவே கிடையாது என்றார் அவர். திமுக சில தரப்புகளுடன் மறைமுக கூட்டு வைத்துள்ளது என்று தெரிவிக் கப்பட்டு வரும் சூழலில் கனி மொழி இவ்வாறு தெரிவித்தார்.

