புதுடெல்லி: துல்லியத் தாக்குதல் களை 'வீடியோ கேம்' என்று கூறி பிரதமர் மோடி ராணுவத்தை அவ மதித்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
"முப்படைகளும் பிரதமர் மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல. ஆனால், முப்படைகளும் தன்னுடைய சொத்து போல நினைத்து மோடி பேசி, நடந்து வருகிறார்.
"துல்லியத் தாக்குதல்கள் அனைத்தையும் மோடி நேரில் போய் நடத்தவில்லை. நம்முடைய ராணுவம் நடத்தியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
"காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப் பட்ட துல்லியத் தாக்குதல்கள் அனைத்தும் உண்மையான தாக்கு தல்கள் அல்ல. அது 'வீடியோ கேம்' என்று மோடி பேசியிருந்தால் அவர் காங்கிரஸ் கட்சியை அவ மதிக்கவில்லை. நாட்டின் ராணு வத்தை அவமதித்தது போன்றதா கும்.
"துல்லியத் தாக்குதல்களைச் செய்தது நமது ராணுவம்தான். இதை நாங்கள் அரசியல் செய்ய வில்லை, பேசவும் இல்லை. ஆதலால், நமது பிரதமர் மோடி நமது ராணுவத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மேலும் பேசிய அவர், "தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்திவிட் டோம் என்று பிரதமர் மோடி பேசு கிறார். காங்கிரஸ் கட்சியா மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பி யது. காங்கிரஸ் ஒருபோதும் மசூத் அசாரை அனுப்பவில்லை. பாஜக தான் தீவிரவாதத்துடன் சமரசம் செய்துகொண்டது.
"இந்தத் தேசத்து மக்கள் முன் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மைதான்.
"ஆண்டுக்கு 2 கோடி இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங் குவதாக கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.
"ஆனால், எங்களின் தேர்தல் வாக்குறுதியில் இந்த முறை வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிகமான முக்கியத்துவம் வழங் கப்பட்டுள்ளது. எவ்வாறு உரு வாக்குவோம், என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளோம்.
"மோடியின் அரசால், நாட்டின் பொருளியல் அழிக்கப்பட்டுவிட் டது. பிரதமர் மோடி வல்லுநர் அல்ல. அவர் எந்த விஷயத்தையும் வல்லுநர்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை.
"நான் அவருடன் வேலை யின்மை, ஊழல் குறித்து விவா திக்கத் தயாராக இருக்கிறேன்.
"மக் களவைத் தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும்," என்று கூறினார்.

