பெங்களூரு: கல்குவாரி முறை கேட்டைத் தடுப்பதற்காக தாசில் தார் ஒருவர் கூலித் தொழிலா ளியைப் போல உடையணிந்து சென்று ஐவரைக் கைது செய் தார்.
கடந்த ஜனவரி 17ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள ஷிகாரிபுரா தாசில்தாராக பொறுப்பேற்றார் பி.என்.கிரீஷ்.
அதன் பிறகு கல்குவாரி முறைகேடு குறித்து சோதனை நடத்தச் சென்றால் அரசு வாக னத்தைப் பார்த்தவுடன் முறை கேடுகளில் ஈடுபடுவோர் தப்பி யோடினர்.
எனவே கடந்த 30ஆம் தேதி ஷிகாரிபுரா அருகேயுள்ள நாரா யணபுராவில் குவாரி முறைகேடு நடைபெறுவதாக தாசில்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடி யாக அவர் கூலித் தொழிலாளியைப் போல லுங்கி, டி ஷர்ட் அணிந்து, தலைப்பாகைக் கட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் குவாரிக்குச் சென் றுள்ளார். அதனால் இவரை அடையாளம் தெரியவில்லை.
அங்கு சென்ற தாசில்தார் கிரீஷ், அதிரடியாக செயல்பட்டு சட்டவிரோத குவாரி முறைகேட் டில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்துள்ளார். மேலும் 3 டிராக்டர் கள், 2 ஜேசிபி வாகனங்களை யும் பறிமுதல் செய்தார்.
இதனிடையே தொழிலாளி போல கிரீஷ் உடையணிந்து நிற் கும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவிட் டது.

