புவனேஸ்வர்: ஒடிசா மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய சூறாவளியின் போது மக்களின் வசிப்பிடங்கள் மட்டுமல்லாமல் விமான நிலையம், ரயில் நிலையங்கள் என பொது இடங்களும் பெருஞ்சேதத்திற்கு உள்ளாகின.
பலத்த காற்று, கனமழையுடன் ஃபானி புயல் கடந்த வெள்ளிக் கிழமை ஒடிசாவில் கரையைக் கடந்தது.
அப்போது பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந் தன. வீடுகளும் கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வ ரில் உள்ள பிஜ்ஜூ பட்நாயக் அனைத்துலக விமான நிலையத் தின் மேற்கூரை முற்றிலும் சேதம் அடைந்தது. விமான நிலையத்தின் பெயர்ப் பலகைகளும் பறந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அனைத்து விமானச் சேவை களும் நிறுத்தப்பட்டன.
வடகிழக்குப் பகுதிக்கான 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் கூறி உள்ளது.
இதேபோல், 160க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மேற்கூரையும் பலத்த காற்றில் பறந்தது.
250 அடி ராட்சத கிரேன் ஒன்று கட்டடங்களின் மீது விழுந்து பலத்த சேதத்தை ஏற் படுத்தியது.
புயல் கரையைக் கடக்கும் போது தங்களது வீடுகள் அதிர்ந்த தாக அம்மாநில மக்கள் கூறியதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
மேலும் புயல் தொடர்பான சம்ப வங்களில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பொருட்சேதம் அதிக அளவில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் பெருமளவு தடுக்கப்பட்டதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
ஃபானி புயல் மீட்பு நடவடிக் கைகள் குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார்.
"புயல் எச்சரிக்கை விடுக்கப் பட்டவுடன் 24 மணி நேரங்களுக் குள்ளாக 12 லட்சம் மக்கள் பாது காப்பான இடங்களுக்கு மாற்றப் பட்டனர்.
"மீட்கப்பட்டவர்களின் உணவுத் தேவைக்காக ஏழாயிரம் சமை யலறைகள் தயார் நிலையில் இருந் தன.
"இந்த மீட்பு நடவடிக்கைக ளில் மொத்தம் 45,000 தன் னார்வலர்கள் ஈடுபட்டனர்," என் றார்.
மேலும் பெருமளவு உயிர் சேதத்தைத் தவிர்க்க உதவிய ஆந்திராவிற்கு ஒடிசா நன்றி தெரிவித்துள்ளது.
இப்புயலின் போது ஆந்திரா வில் செயல்பட்டு வரும் 'ரியல் டைம் கவர்னன்ஸ் சொசைட்டி' எனப்படும் அமைப்பின் உதவி ஒடிசா அரசுக்கு வழங்கப்பட்டது.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர் கள் ஒடிசா அரசுக்கு எச்சரிக்கை களை விடுத்த வண்ணமும் முக் கிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித் தும் தகவல் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
கடந்த 1999ஆம் ஆண்டு தாக்கிய புயலில் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.
ஃபானி புயலால் பெருஞ் சேதத்தைச் சந்தித்த ஒடிசாவிற்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
ஐநா பாராட்டு
ஃபானி புயலின்போது, முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொண்டு, உயிர்ச் சேதங்களைக் குறைத்த இந்தியா வுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா பேரிடர் ஆபத்துக் குறைப்பு முகமை, ஃபானி புயலை, இந்தியா திறம்பட எதிர்கொண்டதாக குறிப்பிட்டு உள்ளது.
புயலின் நகர்வை இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லிய மாகக் கணித்துக் கூறியதாக தெரிவித்துள்ளது.
புயலால் ஒருவர் கூட உயிரிழக் கக்கூடாது என்கிற இலக்கை, ஃபானி புயல் கரையைக் கடந்த போது, இந்தியா கிட்டத்தட்ட எட்டி யுள்ளதாகவும் ஐநா குறிப்பிட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தையும் விட்டு வைக்காத ஃபானி
ஒடிசாவில் கரையைக் கடந்து வலுவிழந்த ஃபானி, மீண்டும் மிக தீவிரப்புயலாக மாறி நேற்று அதிகாலை மேற்குவங்கத்தையும் சூறையாடியது.
மேற்குவங்கத்தின் கடலோர மாவட்டமான மிட்னாபூரைச் சேர்ந்த 35,000க்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக் கப்பட்டனர்.
ஒடிசாவின் பாலசோரிலிருந்து மேற்கு வங்கத்தில் நுழைந்த ஃபனி புயல், கராக்பூரில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்தது.
மேலும் வடக்கு, வடகிழக்குத் திசைகளில் நகர்ந்த ஃபானி புயல், நேற்று மாலை பங்ளாதேஷிற்குள் நுழைந்து அங்கும் கோரத்தாண்ட வம் ஆடியதில் 14 பேர் பலியான தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

