சுடச் சுடச் செய்திகள்

பாமக பேராளர் கொலையில் ஐஎஸ் வாடை; ஆதாரங்கள்

சென்னை: பாமக தொண்டரான ராமலிங்கம், 41, என்பவர் கும்ப கோணம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப் பிற்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்து இருக்கின்றன. 

இந்தக் கொலை பற்றி புலன் விசாரணை நடத்திவரும் தேசிய புலனாய்வு முகவை, ஆயுதங்கள், மின்னிலக்கச் சாதனகள், ரொக் கம் ஆகியவற்றைப் பல இடங்களி லும் தான் நடத்திய சோதனைகளில் பறிமுதல் செய்து இருக்கிறது. 

இதோடு, இஸ்லாமிய முழக்க வாசகங்களும் அந்த முகவையிடம் சிக்கி இருக்கின்றன. அவற்றை வைத்துப் பார்க்கையில் இந்தக் கொலை விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு இருப்போர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப் பிற்கு ஆதரவாளர்களாக இருக்கக் கூடும். அல்லது அந்த அமைப் பின் போராளிகளாக இருக்கக் கூடும் என்று அனுமானிக்க இடமிருப்பதாக இந்தப் புலன் விசாரணை முகவை தெரிவித்து உள்ளது. 

கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் ஆகிய நகர் களில் 20 இடங்களில் தன் குழு வினர் சோதனையிட்டதாக இந்த அமைப்பு அறிக்கையில் கூறியது. 

ராமலிங்கம் கொலை விவகாரம் தொடர்பான புலன்விசாரணையை தமிழ்நாடு போலிசிடமிருந்து இந்த முகவை ஏற்றுக்கொண்டுள்ளது. 

இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இந்த புலன்விசாரணை முகவை உட்பட இந்தியாவின் வேவுத்துறை அமைப்புகள் அனைத்தும் விழிப்பு நிலையில் இருந்து வருகின்றன. 

ராமலிங்கம் கொலை விவகாரம் தொடர்பில் 10 பேர் கைதாகி உள் ளனர். ஆறு பேர் தேடப்பட்டு வரு கிறார்கள். இவர்கள் அனைவரின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களி லும் சோதனைகள் நடந்தன. 

இதோடு, பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த 4 அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. 16 கைத்தொலைபேசிகள், 21 சிம் கார்டுகள், 3 மடிக்கணினிகள், 9 கணினித் தகவல் சேமிப்புச் சாதனங்கள், 118 ஒலி, ஒளிப்பதிவு வட்டுகள், 7 குறிப்பேடுகள், பதா கைகள் உள்ளிட்ட பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றி இருக் கிறார்கள். ஒரு வாள், கூர்மையான முனையைக் கொண்ட ஒரு கத்தி, ரூ. 200,000 பணம் ஆகியவையும் பறிமுதலாகி இருக்கின்றன. 

சோதனைகள் நடந்த இடங் களில் 100 பத்திரங்களும் கைப் பற்றப்பட்டு இருப்பதாகவும் இவை அனைத்தும் பகுப்பாய்வுகளுக்காக அனுப்பப்பட்டு இருப்பதாககவும் தகவல் வட்டாரங்கள் கூறின. 

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா  அமைப்புக்கும் இடையில் தொடர்பு உண்டு என்பதைக் காட்டுவதற்கான சாட்சியமும் அகப்பட்டு உள்ளதாக அதிகாரி கள் கூறுகிறார்கள். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon