லாட்டரி மன்னன்: சோதனைகள், ரகசிய பணக்குவியல், ஊழியர் சடல மர்மம்

லாட்டரி மன்னன்: சோதனைகள், ரகசிய பணக்குவியல், ஊழியர் சடல மர்மம்

2 mins read

கோவை: லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின் என்பவருக்குச் சொந்த மான 70க்கும் அதிக இடங்களில் தேசிய புலன்விசாரணை முகவை அதிகாரிகள் தீவிர சோதனை களை நடத்தினார்கள்.

அந்த இடங்களில் 22 இடங்கள் கோயம்புத்தூரில் இருக்கின்றன.

வெள்ளக்கிணறு பகுதியில் இருக்கும் மார்ட்டின் வீட்டில் அதி காரிகள் மேற்கொண்ட சோதனை யில் ரூ 5.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வீட்டில் ரகசிய அறை ஒன்று இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அந்த அறைக்கான படிக்கட்டுகள் மறைக்கப்பட்டு இருந்தன. அதில் ஏறிச்சென்று அதிகாரிகள் சோதனை நடத்திய தில் கோடானுகோடி பணம் பிடிபட் டதாகத் தெரிகிறது.

இதனிடையே, கோயம்புத்தூரில் இருக்கும் மார்ட்டின் ஹோமியோ பதி மருத்துவக் கல்லூரியில் 20 ஆண்டு காலமாக கணக்குத் தணிக்கையாளராகப் பணியாற்றி வரும் பழனிசாமி என்பவரை போலிஸ் புலன்விசாரணைக்காக கொண்டுசென்றது.

போலிஸ் பழனிசாமியை விசா ரித்தபோது திடீரென்று அவர் தன் மணிக்கட்டை வெட்டிக்கொண் டார் என்று கூறப்பட்டது.

அதனையடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பழனிசாமி வெள்ளிக்கிழமை விடு விக்கப்பட்டார். ஆனால் அவ ருடைய உடல் பின்னர் மேட்டுப் பாளையத்தை அடுத்த காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடல மாக மிதந்தது.

இது பற்றி அதிகாரிகள் விசார ணைகளை முடுக்கிவிட்டு இருக் கும் நிலையில், பழனிசாமியின் உடல் பரிசோதனைக்காக கோவைக்குக் கொண்டுசெல்லப் பட்டபோது இந்த விவகாரத்தைக் கொலை வழக்காக முதலில் பதியவேண்டும் என்றும் அதற்குப் பிறகே பிரேதப் பரிசோதனை நடக்கவேண்டும் என்றும் பழனி சாமி குடும்பத்தினர் போலிசாரிடம் பிரச்சினையைக் கிளப்பினர்.

அப்போது அந்தச் சம்பவத்தை படம் பிடித்த ஒருவரின் கைத் தொலைபேசி உடைக்கப்பட்டது.

பழனிசாமியின் உடல் மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனை யில் பலத்த பாதுகாப்புடன் இருப்ப தாக நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பல கோணங் களிலும் விசாரணை நடக்கிறது.

மார்ட்டின் கோல்கத்தாவில் கைதானார். அவர் இப்போது போலிஸ் புலன்விசாரணையின் கீழ் இருக்கிறார் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.