ஃபானியின் சீற்றம் தணிந்தது; நிவாரணப் பணி தொடங்கியது

ஃபானியின் சீற்றம் தணிந்தது; நிவாரணப் பணி தொடங்கியது

1 mins read
b17fcdd7-d83d-4bb5-a577-ea61cb998c97
பூரி மாவட்டத்தில் ஃபானி புயல் ஏற்படுத்திய நாசத்தில் குப்பைக்கூளமாக மாறிய பேருந்து நிறுத்தம். படம்: ஏஎஃப்பி -

அதிகச் சேதத்தை ஏற்படுத்திக் கிழக்கு இந்தியாவையும் பங்ளா தேஷையும் ஃபானி புயல் வதைத்த பின், அதிகாரிகள் பெரும் அள வில் மறுசீரமைப்பு, நிவாரணப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

புயல் ஒடிசாவையும் மேற்கு வங்காளத்தையும் தாக்கியதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ள தாக இந்திய ஊடகங்கள் தெரி வித்துள்ளன.

அத்துடன் நேற்று முன்தினம் ஃபானி புயல் பங்ளாதேஷைத் தாக் கியதில் 14 உயிர்கள் பலியாகி உள்ளதாகவும் 'டெய்லி ஸ்டார்' நாளிதழ் கூறியுள்ளது.

இந்த எண்ணிக்கையில் 12 வயதும் இரண்டு வயதும் நிரம்பிய சிறார்கள் அடங்குவர் என பிபிசி நேற்று தெரிவித்தது.

பங்ளாதே‌ஷில் 1,000க்கும் மேற் பட்டோர் தங்கள் வீடுகளை இழந் ததுடன் சில கிராமங்கள் நீருக் கடியில் சென்றுள்ளன.

இதைத் தொடர்ந்து ஒடிசாவின் சில பகுதிகளில் தொலைபேசிச் சேவைகளும் மின்சார விநியோக மும் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.

பங்ளாதே‌ஷில் புயலால் பாதிக் கப்பட்ட இடங்களில் மின்சார விநி யோகம் தடைபடாமல் இருக்க 1,000க்கும் மேற்பட்ட மின்னாக்கி கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.