புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி யின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அறைந்ததால் பர பரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லியின் வடக்குத் தொகுதி யில் கெஜ்ரிவால், நேற்று முன் தினம் திறந்த ஜீப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
மோட்டி நகர் பகுதிக்குச் சென்றபோது அங்கிருந்தவர்களி டம் கைகுலுக்கியும் பேசிக் கொண்டும் இருந்தார்.
அப்போது சிவப்புச் சட்டை அணிந்த ஒருவர் திடீரென ஜீப் மீது ஏறி கெஜ்ரிவால் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கெஜ்ரிவால் சரிந்து விழுந்தார்.
உடனடியாக அந்நபரைப் பிடித்த முதல்வரின் ஆதரவாளர் கள், அவரைத் தாக்கினர். பின்னர் விசாரணைக்காக போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையின்போது கெஜ்ரி வாலைத் தாக்கிய அந்நபரின் பெயர் சுரேஷ் என்று தெரிய வந்தது.
ஆம் ஆத்மி ஆதரவாளரான அவர், அக்கட்சியின் மீது நாளடை வில் ஏற்பட்ட அதிருப்தி காரண மாக இவ்வாறு நடந்துகொண்ட தாக விசாரணையின்போது கூறி உள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆம் ஆத்மியின் டுவிட்டர் பக்கத்தில், "டெல்லி முதல்வர் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பேரணி யின்போது, அவரை ஒருவர் தாக்கியுள்ளார். கோழைத்தனமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்.
"எதிர்க்கட்சிகளின் தூண்டு தலின்பேரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்றவற்றை செய்து எங்களின் வெற்றியைத் தடுத்து நிறுத்திவிட முடியாது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை அல்ல. மை, காலணி, மிளகாய் தூள், கார் மீது கல்வீச்சு என்று இதற்கு முன்னும் அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

