புதுடெல்லி: முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட 51 தொகுதிகளில் இன்று 5வது கட்டமாக வாக்குப்பதிவு நடை பெறுகிறது.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதாவது 373 தொகுதிகளுக்குத் தேர்தல் முடிந்து உள்ளது.
இந்நிலையில் 7 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கான 5வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
இதையொட்டி பீகாரில் 5, காஷ் மீரில் 2, ஜார்கண்ட்டில் 4, மத்திய பிரதேசத்தில் 7, ராஜஸ்தானில் 12, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்தது.
இவற்றில் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8.76 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகு தியானவர்கள். மொத்தம் 96,088 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றுள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத் தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியும் அக்கட்சியின் முன் னாள் தலைவரும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி தலைவருமான சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியும் அடங்கும்.
இவர்கள் தவிர மத்திய அமைச் சர் ராஜ்நாத்சிங் (லக்னோ), ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிடும் ஸ்மிருதி இரானி, ரத்தோர் (ஜெய்ப்பூர், ரூரல்), ஜெயந்த் சின்கா, அர்ஜின்ராம் மேக்வால் உள்ளிட்ட தலைவர்களும் இன் றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.
மீதமுள்ள 118 தொகுதிகளில் வரும் 12ஆம் தேதி ஆறாம் கட்டத் தேர்தலும் 19ஆம் தேதி கடைசி கட்டத் தேர்தலும் நடைபெறும்.
அதன் பிறகு 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் தெரிய வரும்.

