கமல்ஹாசன்: அரசியல் தலைவர்கள் என்னைவிட சிறப்பாக நடிக்கின்றனர்

கமல்ஹாசன்: அரசியல் தலைவர்கள் என்னைவிட சிறப்பாக நடிக்கின்றனர்

1 mins read

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் பேசியபோது, "தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விடச் சிறப்பாக நடிக்கின்றனர்; அதைக்கண்டு மக்களாகிய நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மத பேத மில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது," என்றார்.