105 வயது தாயைச் சுமந்துசென்று வாக்களிக்க வைத்த மகன்

105 வயது தாயைச் சுமந்துசென்று வாக்களிக்க வைத்த மகன்

1 mins read
5a105616-9784-431c-894b-9e8037bfbf2a
-

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 450க்கு வாக்காளர் ஒருவர் தனது 105 வயதான தாயைத் தோளில் சுமந்து வந்து வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். இந்தக் காட்சி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளிப் படம் சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதே போல் இரண்டாம் கட்ட வாக்களிப்பின்­போது அசாமில் 102 வயது சர்குல் பிபி வாக்களித்தார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் 108 வயது தரம் சிங் டோடா மாவட்டத்தின் தாத்ரி என்னும் இடத்திலும் மணிப்பூரில் 100 வயது வாங்கிமாயும் பானும் என்பவரும் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில்தான் நூறு வயதைத் தாண்டிய ஏராளமான முதியோர் வாக்களித்ததாகக் கூறப்படு­கிறது. படம்: இந்திய ஊடகம்