சுடச் சுடச் செய்திகள்

தலைமை நீதிபதிக்குச் சாதகமான தீர்ப்பு; நீதிமன்றம் வெளியே பெண்கள் போராட்டம்

இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் செய்திருந்தார். 

இது தொடர்பாக உள் விசார ணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்தப் பெண் முன்வைத்த  குற்றச் சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. 

இதன் அடிப்படையில் அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

அதேசமயம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் நன்மதிப் புக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி தொடர் பாக  விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடைப்பிடித்த அணுகு முறைகளுக்குச் சில வழக்கறி ஞர்கள், பெண் உரிமை ஆர்வ லர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரி வித்தனர். 

தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நேற்று போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்களை போலிசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதனையடுத்து, உச்ச நீதி மன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றால் அதனை சமாளிக்கும் வகையில் போலிஸ் அதிகாரிகள் பலர் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகார் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக ஆதாரம் இல்லை எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டதும் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கூடியிருந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் செய்த பெண்களை டெல்லி போலிசார் கைது செய்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon