வெளிநாடு செல்ல அனுமதி

வெளிநாடு செல்ல அனுமதி

1 mins read

புதுடெல்லி: ஊடக நிறுவனம் ஒன்றுக்கு தமது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக பணம் பெற்றதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்கு தொடுத்திருப்பதால் கார்த்தி வெளிநாடு செல்வதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கார்த்தி. அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், பத்து கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திய பிறகு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.