மக்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்கிறார் மம்தா

மக்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்கிறார் மம்தா

1 mins read

கோல்கத்தா: கடவுள் ராமரை தாம் மதிப்பதாகவும், அவருக்கு முறையாக எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

விஷ்ணுபூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் கடவுள் ராமரை பாஜகவினர் தங்கள் முகவராக்கிக் கொள்வதாக விமர்சித்தார்.

"நீங்கள் ஜெய் ஸ்ரீராம் என்பீர்கள், மற்றவர்களையும் கூற வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவீர்கள். நீங்கள் விரும்பும் மந்திரங்களை முழக்கமிடுமாறு மக்களை வலியுறுத்த முடியாது," என்றார் மம்தா.

முன்னதாக, ஜெய் ஸ்ரீராம் என்று சொல்பவர்களை எல்லாம் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு கைது செய்வதாக பிரதமர் மோடி பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் மம்தா. இவருக்கும் பிரதமருக்கும் இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.