ஒரே வாரத்தில் கட்சி தாவிய 2 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: ஒரே வாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் ஆம் ஆத்மி தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

டெல்லி, காந்திநகர் தொகுதி எம்எல்ஏவான அணில் வாஜ்பாய் கருத்து வேறுபாடு காரணமாக ஆம் ஆத்மியில் இருந்து கடந்த 3ஆம் தேதி விலகினார். பின்னர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்   டார்.

இந்நிலையில் பிஜ்வாசன் சட்டப்பேரவைத் தொகுதி யின் எம்எல்ஏவான தேவிந்திர் சிங் செராவத் தும் ஆம் ஆத்மியில் இருந்து விலகி உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தம்மை ஆம் ஆத்மி கட்சியினர் அவமதித்ததாக அவர் குற்றம்சாட்டினார். 

தாம் பல வகையிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமது தொகுதியின் தேவைகளும் புறக்கணிக்கப் பட்டதால் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட எனக்கு அழைப்பு விடுக்கப்படுவது இல்லை. கட்சித் தலைமைக்கு தெரிந்தே நான் பல வகையிலும் புறக்கணிக்கப் பட்டேன். 

“அந்த புறக்கணிப்பு தான் என்னை இத்தகைய முடிவை நோக்கி செலுத்தியது,” என்று தேவிந்தர் சிங் செராவத் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

டெல்லியில் நாடாளு மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஒரே வாரத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் கட்சி தாவியது ஆம் ஆத்மி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon