மதுரை: பொய் சொல்வதில் ஒரு வர் நோபல் பரிசை வெல்ல முடியும் என்றால் அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் வழங்க வேண்டும். அவர்தான் அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தமான வர் என்று தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார் பில் போட்டியிடும் முனியாண்டியை ஆதரித்து பழனிசாமி அவனியா புரம், வில்லாபுரம் பகுதிகளில் திறந்தவேனில் சென்று வாக்குச் சேகரித்தார்.
"மு.க.ஸ்டாலின் பொது இடங் களில் தரம் தாழ்ந்த வார்த்தை களைப் பயன்படுத்தி பேசி வரு கிறார். அவரது பேச்சு அநாகரீக மானது. அதிமுக அரசுக்கு எதிராக திட்டமிட்டுப் பல்வேறு பொய்களை பரப்பி வருகிறார்.
"தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 35,000க்கும் அதிகமான போராட்டங்களைத் தூண்டிவிட்டது திமுகதான். அதனை சமாளித்து நாங்கள் ஆட்சி நடத்தி வருகிறோம்.
மக்களும் அதிமுக தொண்டர் களும் எம்எல்ஏக்களும் என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். மு.க.ஸ்டாலினும் திமுகவினரும் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நான் என்றும் அதிமுகதொண்டன் தான். மக்கள்தான் முதல்வர். அவர்களின் கஷ்டநஷ்டங்களை நன்கு அறிந்த விவசாயி நான் என்று பேசினார்.

