தினகரன்: இனி முதல்வரின் ஆட்டம் முடியப்போகிறது

தினகரன்: இனி முதல்வரின் ஆட்டம் முடியப்போகிறது

1 mins read

சென்னை: தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமியின் ஆட்டம் இனி காலியாகிவிடும். துரோகம் செய்த வர்களுக்கு அடிவிழும் என்பதை ஆர்.கே. நகரைப் போன்றே ஓட்ட பிடாரத்திலும் செய்துகாட்ட வேண் டும். மத்தியில் மே 23ஆம் தேதி ஆட்சி முடிவுறும்போது தமிழகத் திலும் முற்றுபெற்றுவிடும். அப் போது முதல்வர் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியது தான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கிண்டலாகப் பேசியுள்ளார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர் ராஜை ஆதரித்து ஒட்டநத்தம், மணியாச்சி, ஓசனாத்து, புதிய முத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிக்குச் சென்று தினகரன் வாக்கு கேட் டார். அப்போது பேசிய அவர், "மக் கள் விரும்பாத ஆட்சியை இனி நடக்க விடக்கூடாது.

மக்களைச் சந்தித்தால் ஆட்சியைத் தொடர முடியாது என எண்ணி குறுக்கு வழியில் ஆட்சியைத் தொடர வழி தேடுகின்றனர். பெரியகுளம் பன்னீர்செல்வம் தற்போது வாரணாசி பன்னீர்செல்வ மாகிவிட்டார். அதிமுகவிற்கும் ஜெயலலிதாவிற்கும் செய்த துரோ கத்திற்காக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் விதவித மான நிறங்களில் கையில் கயிறு கட்டிக்கொண்டு அலைகிறார்கள். கட்சிக்கு எதிராக மாற்றி வாக்களித்த பன்னீர்செல் வம் மீது நடவடிக்கை கிடையாது. ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவ டிக்கை எடுக்கின்றனர்," என்றார்.