சென்னை: இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது. ஆனால் பெருகிவரும் இந்த மக் கள் தொகைக்கு ஈடான வேலை வாய்ப்புகள் இன்றி ஏராளமான மக் கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்கள்போல் வேலையின்றி தவித்துவரும் 80 லட்சம் இளையர் களில் 90 விழுக்காட்டினருக்கு திமுக வேலை வாய்ப்புகளை வழங் கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தமிழர் களுக்கு 90% முன்னுரிமை அளிப்பதே திமுகவின் முக்கிய நோக்கம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், "வேலைவாய்ப்பு அலு வலகங்களில் பதிவு செய்துவிட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் அல்லல் பட்டுக் கொண்டுள்ளனர்.
"இந்நிலையில் இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் அதன் பொதுத்துறை நிறுவனங் களிலும் வட மாநிலத்தவருக்கே அத்தனை வேலை வாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோக செயலுக்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித் துக்கொள்கிறேன்.
"தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப் பறிக்கும் கொடும் செயல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, குறிப்பாக கடந்த 5 வருட காலத்தில் முன் எப்போதும் இல் லாத அளவுக்குப் பல மடங்கு பெருகிவிட்டது மிகுந்த வேதனை யளிக்கிறது.
"அண்மையில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற் பயிற்சி பெறுவதற்காக நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக் கணிக்கப்பட்டு, வட மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
"நூற்றுக்கணக்கான தமிழக இளைஞர்கள் அந்தத் தேர்வில் கலந்துகொண்டும் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.
"கோவை, சென்னை உள்ளிட்ட ரயில்வே அலுவலகங்களிலும் இந்த அநீதி நம் மாநில இளை ஞர்களுக்குத் தொடர்ந்து இழைக் கப்பட்டு வருகிறது.
"அந்த அலுவலகங்களில் நடைபெற்ற 2,600 நியமனங்களில் 2,300 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட் டுள்ளார்கள்.
"மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தமிழ் நாட்டில் பழனிசாமி தலைமையி லான 'தமிழக இளைஞர்கள் விரோத' அரசு வீட்டுக்குப்போகும். தமிழகத்தை வேலை வாய்ப்பில் வஞ்சித்த மத்திய பாஜக அரசுக் கும் விடை கொடுக்கப்படும்," என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

