காங்கிரசுக்கு பிரதமர் மோடி புது சவால்

காங்கிரசுக்கு பிரதமர் மோடி புது சவால்

1 mins read
6bb592b5-3869-42fa-bc67-9f24d1e180c4
-

தூத்துக்குடி: போபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கத் தயாரா என காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது பேசிய அவர், 20ஆம் நூற்றாண்டில் வாரிசுக் குடும்பம் எவ்வாறு நாட்டைக் கொள்ளையடித்தது, அழித்தது என்பதை தேசத்தின் இளையர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றார்.

முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லி பிரசாரம் செய்ய காங்கிரஸ் தயாரா? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

"நான் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுக்கிறேன். இனிவரும் நாட்களில் பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கெல் லாம் ராஜீவ் காந்தி பெயரைச் சொல்லி பிரசாரம் செய்யும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா? இந்தச் சவாலை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன்.

"வாரிசுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், இந்நாட்டின் பிரதமர் என்றுகூட பாராமல் கடந்த ஓராண்டாக என்னைப் பற்றி எந்தவிதமான மரியாதையும் இன்றி பேசி வருகிறார்," என்றார் பிரதமர் மோடி. படம்: தகவல் ஊடகம்