தமிழிசை: திமுகவின் துரோகம்

தமிழிசை: திமுகவின் துரோகம்

1 mins read

சென்னை: திமுகவின் பழைய கதையை எல்லாம் தோண்டினால் அந்தக் கட்சியின் இப்போதைய தலைவர் ஸ்டாலின், திண்ணைப் பிரசாரத்திற்குக் கூட செல்ல முடியாத நிலைமை உருவாகிவிடும் என்று தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் கடுமை யாகச் சாடினார்.

மூப்பனார் போன்ற தமிழர்கள் பிரதமராவதைத் தடுத்ததே திமுக தான் என்று குறிப்பிட்ட தமிழிசை, அப்துல் கலாம் மீண்டும் அதிப ராவதைத் தடுத்ததும் அதே திமுகதான் என்று கூறினார்.

திமுக என்றாலே நாடக அர சியல்தான் ஞாபகத்திற்கு வரு கிறது என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களி டம் பேசிய தமிழிசை கூறினார்.

தூத்துக்குடியில் பாஜகதான் வெற்றிபெறப் போகிறது என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், திமுக, அமமுக கட்சிகளுக்கு இடையில் ரகசிய கூட்டணி இருப்பதாக பாஜக கூறி வந்தது இப்போது உண்மையாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

நிறைய பேர் பிரதமர் வேட்பாளர் களாக வருகிறார்கள் என்றும் ஆனால் மோடி போல் உழைக்கும் ஒரு தலைவர் யாருமில்லை என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.