புதுடெல்லி: எதற்கெடுத்தாலும் அழும் சிறு குழந்தையைப் போல் காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொள்வதாக மத்திய நிதி அமைச் சர் அருண் ஜெட்லி விமர்சித்துள் ளார்.
காங்கிரசார் எதற்கெடுத்தா லும் புகார்களை எழுப்பி வருவதா கவும் அவர் குறைகூறி உள்ளார்.
"தேர்தல் நன்னடத்தை விதி முறைகள் என்பன பேச்சு சுதந் திரத்தை ஆக்கிரமிக்கும் வகையில் இருக்கக் கூடாது. நன்னடத்தை விதிமுறைகளும், பேச்சு சுதந்திர மும் இணக்கமாக இருத்தல் அவசியம்.
"சிலர் நன்னடத்தை விதிமுறை களை மீறிவிட்டதாக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து புகார் களை அளிக்கின்றனர். ஆனால் நன்னடத்தை விதிமுறைகள் எந்த நிலையிலும் பேச்சு சுதந்திரத்தை நீர்த்துப்போகச் செய்ததில்லை. புகார் அளிப்பவர்கள் இதை மனதிற்கொள்ள வேண்டும்," என்று அருண் ஜெட்லி தெரி வித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக காங் கிரஸ், பாஜக இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசார் கடுமையாக விமர்சித்து வருகின் றனர். பதிலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் காங்கிர சுக்கு பதிலடி கொடுக்கின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நன்னடத்தை விதிமுறை களை மீறுவதாக காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து புகார்கள் எழுப்பப்படுகின்றன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் அருண் ஜெட்லி மேற்குறிப்பிட்டவாறு தெரி வித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் அலுவல கத்தின் கண்ணியத்தை குலைக் கும் வகையில் பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து மோடி மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

