தேர்தல் சூதாட்ட சந்தை: ரூ.12,000 கோடி புழங்குவதாக தகவல்

தேர்தல் சூதாட்ட சந்தை: ரூ.12,000 கோடி புழங்குவதாக தகவல்

1 mins read

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடு முழுவதும் பரவலாக சூதாட்டம் நடைபெறுவதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தல் சூதாட்டச் சந்தையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை புழங்குவதாக அச்செய்தியில் குறிப் பிடப்பட்டுள்ளது.

எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும், அடுத்த பிரதமர் யார், காங்கிரஸ், பாஜக கூட்டணிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் எனப் பல்வேறு கேள்விகளை முன்வைத்து தேர்தல் சூதாட்டம் நடைபெறுகிறது.

கிரிக்கெட் சூதாட்டத்தை விட தேர்தல் சூதாட்டத்தில் அதிக அளவு பணம் புழங்குவதாக ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே சட்டவிரோத சூதாட்டத்தை முடக்குவது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.