வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்வது ஒரு வழி என்றால், ஒரே இடத்தில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொள்வது மற்றொரு வகை. படத்தில் காணும் இவர்கள் இருவரும் பாஜக ஆதரவாளர்கள். இடது பக்கம் இருக்கும் நபர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் தேநீர்க் கடை வைத்துள்ளார்.
அவர் தினமும் தனது கடையில் இருக்கும் சமயங்களில் பிரதமர் மோடியின் உருவம் கொண்ட முகமூடியை அணிந்தபடியே பணிகளைக் கவனிக்கிறார். வரும் 19ஆம் தேதி அன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவு பஞ்சாப்பில் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. படம்: இபிஏ

