சென்னை: நாடாளுமன்றத் தேர் தலுக்குப் பிறகு பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையப் போகிறது என்று அரசியல் களத் தில் பேச்சு பரபரப்பாக தலை தூக்கி இருக்கிறது.
இதற்கு வகை செய்யும் பேச்சு வார்த்தை டெல்லியில் ரகசியமாக நடந்துள்ளதாக ஊடகத் தகவல் கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தவரும் மத்திய அமைச்சர், தமிழக காங் கிரஸ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர், நாடாளு மன்ற உறுப்பினர் என காங்கிரஸ் சார்பில் பல பதவிகளை வகித்த வருமான வாசன், பாஜக பக்கம் தன் கட்சியைக் கொண்டுசெல்லப் போகிறார் என்று கூறப்படுகிறது.
இதன் தொடக்கமாக அவர் பாஜக தலைமையுடன் ரகசியமாக பேச்சு நடத்தி இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
திரு வாசன், திருமண நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்காகவே சில நாட்களுக்கு முன் டெல்லி சென் றார் என்று அவருடைய கட்சியினர் கூறிவந்தாலும் டெல்லியில் பாஜக வின் பெரும் தலைவர்களுடன் வாசன் முக்கியமான பேச்சு நடத்தி இருக்கிறார் என்று நம்பகமான தகவல்கள் கூறுவதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
பரம்பரை பரம்பரையாக காங் கிரஸ் கட்சியில் இருந்து வந்துள்ள குடும்பத்தைச் சேர்ந்த வாசன், காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை அடுத்து தமாகாவை மீண்டும் தொடங்கினார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து படுதோல்வி அடைந்தார். இப்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்து தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் தமாகா போட்டியிடுகிறது.
தஞ்சையில் வெற்றிபெற்றால் மத்தியில் யார் ஆட்சி அமைத் தாலும் தனக்கு மேலவை உறுப் பினர் பதவியையும் அமைச்சர் பதவியையும் யார் தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் அந்தக் கட்சியுடன் தமாகாவை இணைக்கவும் வாசன் தயாராக இருப்பதாகவும் தேர்தலில் பாஜகவே வெற்றிபெறும் என்ற கணிப்பில் அவர் அந்தக் கட்சி யுடன் ரகசிய பேச்சு நடத்தி இருப் பதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கின்றன.

