மதுரை: தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பல பிளவுகள் ஏற்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் கணித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனை ஆத ரித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய துரை முருகன், நாடாளுமன்றத் தேர்த லில் 38 இடங்களிலும் சட்ட சபை இடைத்தேர்தலில் 20 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று திட்டவட்ட மாகக் கூறினார்.
அதிமுகவுக்கு இதுவே கடைசித் தேர்தல் என்றும் இப் போதைய தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சி சுக்குசுக்காக உடையப்போகிறது என்றும் துரைமுருகன் கருத்து தெரி வித்தார்.

