தவியாய் தவிக்கும் அதிமுக

தவியாய் தவிக்கும் அதிமுக

2 mins read

சென்னை: தமிழகத் தேர்தல் களத்தில் முதன்முறையாக இடைத் தேர்தலில் அதிக கவனம் செலுத் தப்பட்டு வருகிறது.

அதிமுக தலைமையிலான ஆட்சி நீடிக்குமா அல்லது கவி ழுமா என்னும் கேள்விகளுக்கு விடையாக இடைத்தேர்தல் முடிவு கள் அமையவிருக்கின்றன.

ஏற்கெனவே 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் வரும் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப் பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளின் இடைத் தேர்தலும் முக்கியவத்துவம் வாய்ந் ததாக அமைந்துள்ளது.

ஒன்றிரண்டு தொகுதிகளின் முடிவுகூட ஆட்சியை அகற்றிவிடக் கூடிய சூழல் நிலவுவதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதி முக அரசாங்கம் பெரும் தவிப்பில் உள்ளது.

வாக்குப்பதிவுக்கு பத்து நாட் களே எஞ்சி இருப்பதால் அதிமுக, திமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் காரணமாக முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த நான்கு தொகுதிகளையும் திரும்பத் திரும்ப வலம் வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு நாட்கள் பிரசாரம் என்று முன்பு முடிவெடுத்த இவர்கள் தற்போது இந்த இருநாள் பிரசாரத்தையே மீண்டும் ஒரு முறை செய்ய உள்ளனர். அதாவது ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு நாட்கள் பிரசாரம் செய்வது இவர் களது திட்டம்.

முக்கிய பகுதிகள் மட்டுமல் லாது வீதிகளிலும் இறங்கி வாக்கு கேட்க அதிமுக தலைவர்கள் முடிவு செய்து அதனை செயல் படுத்தி வருகின்றனர்.

அதேநேரம் இடைத்தேர்தல் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட் சியைக் கைப்பற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரிந்துகட்டிக் கொண்டு தேர்தல் பணியாற்று கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு நாட்கள் என்று திட்ட மிட்டு பிரசாரம் செய்து வரும் அவருக்கு உறுதுணையாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மக்களைச் சந்தித்து வாக்கு வேட்டை ஆடி வருகிறார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று சுற்று பிரசாரத்தை நடத்தி வருகிறார்.

இதற்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் முதல்வரும் எதிர்க்கட்சித் தலை வரும் இந்த அளவுக்குத் தீவிரம் காட்டியதில்லை. அதிகபட்சமாக ஒரு சுற்று பிரசாரத்தை மட்டுமே அவர்கள் இடைத்தேர்தலில் நடத்துவது வழக்கம்.

18 தொகுதிகளின் முடிவுகளின் ஏற்ற இறக்கங்களை நான்கு தொகுதிகளின் முடிவு சரிக்கட்டக் கூடும் என்று அதிமுகவும் திமுக வும் நம்புவதால் பிரசாரத்தில் இது வரை இல்லாத அளவுக்கு தீவிரம் காட்டப்படுகிறது.