சண்டிகர்: பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து மீது காலணி வீசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் ரோத்தக் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதற்கு அப்பகுதியில் திரண்டிருந்த பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது ஒரு பெண் திடீரென சித்துவை நோக்கி காலணி வீசினார். அது அவர் மீது விழவில்லை என்றாலும், அப்பெண்ணை போலிசார் கைது செய்தனர். பிரதமர் குறித்து மோசமாகப் பேசியதால் தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக அப்பெண் கூறியுள்ளார்.

