அமேதி: காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அவதூறாகப் பேசுகிறார் என்றும், இத்தகைய போக்கை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அமேதியை சேர்ந்த இளையர் ரத்தக்கடிதம் எழுதியுள்ளார்.
அண்மைய பிரசாரக் கூட்டங்களில் பேசும் போது, ராஜீவ் காந்தி தான் முதன்மை ஊழல்வாதி என பிரதமர் மோடி விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமேதியை சேர்ந்த மனோஜ் காஷ்யப் என்ற இளையர், ராஜீவை தரக்குறைவாகப் பேசுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டு தன் ரத்தத்தில் கடிதம் எழுதி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.

