அயோத்தி விவகாரம் : நடுவர் குழுவின் தவணைக்காலம் நீட்டிப்பு

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது தொடர்பாக நிலவும் சர்ச்சையை விசாரிக்கும் நடுவர் குழுவின் தவணைக்காலத்தை இந்திய உச்சநீதிமன்றம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த விவகாரத்தால் ஏற்படும் மத ரீதியிலான பதற்றத்தை இந்த நீட்டிப்பு நடவடிக்கை சற்று குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்ச்சைக்குரிய இடம் தொடர்பில் கடந்த மார்ச் 8ஆம் தேதி விசாரித்தபோது உச்சநீதிமன்றம் சமரசக் குழுவிற்கு உருவாக்கத்திற்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா, மூன்று உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவின் தலைவர். இந்தக் குழு தயாரித்த அறிக்கை பின்னர் உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையில் இருக்கும் தகவல்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. 

அயோத்தியில் புராதனக் காலத்தில் கட்டப்பட்ட ராமர் கோயிலைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சுல்தான் ஒருவர் இடித்து அதே இடத்தில் பள்ளிவாசலை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக தீவிர இந்துக்கள் 1992ஆம் ஆண்டில் அந்தப் பள்ளிவாசலை இடித்தனர். இந்தச் சம்பவம் 2,000 பேர் மடிந்த இனக் கலவரத்திற்கு வித்திட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon